Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குடைமிளகாய் அல்வா… காரமில்லாத, இனிப்பு சுவையில்…!!

குடைமிளகாய் அல்வா செய்ய தேவையான பொருள்கள்: 

குடைமிளகாய்                                 – ஒன்றரை கப்
பாசி பருப்பு                                         – அரை கப்
ஜவ்வரிசி                                             – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை                                              – ஒன்றரை கப்
நெய்                                                        – முக்கால் கப்
ஏலக்காய்த் தூள்                               – அரை டீஸ்பூன்
முந்திரி, திராட்சை                          – 10
பால்                                                        –  1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் குடைமிளகாயை எடுத்து  துண்டுகளாக நறுக்கி, அதன்  விதைகளை நீக்கி விட்டு, மிக்சிஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி,  ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து பாசிப் பருப்பை போட்டு லேசாக  வறுத்து எடுத்து கொள்ளவும்.  அடுப்பில் குக்கரை வைத்து அதில் வறுத்த பாசிப் பருப்பு, ஜவ்வரிசி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைத்த குடைமிளகாய் விழுது, வேக வைத்த பாசிப் பருப்பு, ஜவ்வரிசி  சேர்த்து நன்றாகக் கிளறவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து சர்க்கரை சேர்த்து , சிறிது தண்ணீர் விட்டுக் கரைந்ததும் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடுவும்.

பின்பு கொதிக்க வைத்த சர்க்கரையானது, கம்பிப் பாகு பதம் வந்ததும், அதில் வேகவைத்த  குடைமிளகாய், பாசிப் பருப்பு விழுதை இதில்  சேர்த்து, சற்றுக் கெட்டியானதும் அதில் நெய் ஊற்றி, ஏலக்காய்த் தூள் தூவிநன்கு கிளறிவிடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றி,அதில் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்துச் கொதிக்க வைத்த கலவையில் கொட்டி கிளறினால், சுவையான பச்சை வண்ண குடைமிளகாய் அல்வா  தயார்.

Categories

Tech |