தேங்காய் பால் பணியாரம்செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய் – 1 சிட்டிகை
சர்க்கரை – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை :
முதலில் பத்திரத்தில் உளுந்து, பச்சரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, மிக்சிஜாரில் போட்டு வடை மாவு பதத்திற்கு அரிசியை நன்கு அரைத்து எடுக்கவும்.
பின்பு அரைத்து வைத்திருக்கும் மாவில், ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
தேங்காயை அதை எடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில்அதை போட்டு அரைத்து தண்ணீர் விட்டு நன்கு வடிகட்டி தேங்காய் பால் தனியாக எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை, அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் மாவை எடுத்து, அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் பணியாரத்தை எடுத்துஅதில் கலந்து வைத்த தேங்காய் பால் சேர்த்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் பணியாரம் ரெடி.