ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நம்பப்படுகிறது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் அமெரிக்க இந்தியா இடையே இருக்கும் உறவிற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கா- இந்தியா உறவுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக மாற்றுவதற்கும், பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கும் ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகள் இடையே சுமூகமான உறவு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே 2006ஆம் ஆண்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோ பைடன் தனது லட்சிய பயணம் 2020-ஐ நோக்கி தொடங்கி இருப்பதாகவும், உலக நாடுகளில் அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக திகழும் என்பதே தனது கனவு என்றும் கூறியிருந்தார்.