Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா?இல்லையா?… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது பற்றி அறிவிப்பு 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று சென்னையில் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி. அன்பழகன் கூறியுள்ளார்.

Categories

Tech |