சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன், சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து , வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் இதில் சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சிக்கி கொண்டனர். இவர்களது உடலில் தீ பற்றியது. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயை அனைத்து பார்த்த போது சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.