Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடி அறுக்கல…. கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை…. திருநெல்வேலியில் பரபரப்பு…!!

பிறந்து தொப்புள்கொடி அறுக்காத ஒரு நாளே ஆன குழந்தை கிணற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் சிவந்திபட்டி காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிணற்றில் இறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து அதே பகுதியில் விவாகரத்து பெற்ற பெண்மணி ஒருவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

Categories

Tech |