Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க தடை …! வெளியான அதிரடி உத்தரவு …!!

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட இருக்கும் நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான ஒரு மிக முக்கிய உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தீபாவளியை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. காற்று மாசு எந்தெந்த நகரங்களில் அதிகமாக இருக்கிறதோ அங்கு பட்டாசு வெடிப்பதற்கான தடையை பிறப்பித்திருக்கிறது.இந்த தடையின் முப்பதாம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காற்று மாசு அதிகம் இருக்கக்கூடிய டெல்லி போன்ற நகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கான தடை இருக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் பட்டாசு வெடிக்கலாமா ? அதற்கு தடை விதிக்க விதிக்கலாமா என்ற ஒரு விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவைப் தற்போது பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |