குஜராத் மாநிலம் ஹசிராவில் ரோப் பாக்ஸ் முனையத்தை காணொளி மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே கப்பல் சேவையையும் தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் ஹசிராவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மீட்டர் நீளம், மற்றும் 100 மீட்டர் அகலத்தோடு ரோப் பாக்ஸ் முனையத்தை அமைக்கப்பட்டது. நிர்வாக அலுவலக கட்டிடம் வாகனங்களை நிறுத்தும் இடம் துணை மின் நிலையம் மற்றும் நீர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி இந்த முனையத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார். மேலும் பவுண்நகர் மாவட்டத்தில் உள்ள கோகா மற்றும் சூரத்தில் உள்ள ஆசிர ஆகிய நகரங்களுக்கு இடையே படகுப் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயரை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் என்று மாற்றம் செய்து அறிவித்தார். புதிதாக தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்தால் கோகா மற்றும் ஹசிராவுக்கு இடையேயான பயண தூரம் 370 கிலோ மீட்டர்களில் இருந்து 90-ஆக குறையும். 10 முதல் 12 மணி நேரமாக இருந்த பயண நேரம் தற்போது சுமார் 4 மணி நேரமாக குறையும். மூன்று அடுக்குகள் கொண்ட ரோப் பாக்ஸ்கள் 30 டிரக்குகள், 100 பயணிகள் கார், 500 பயணிகள் மற்றும் 34 பணியாளர்கள் பயணிக்கும் திறன் கொண்டது.
தினம்தோறும் 3 பயண சேவைகளை வழங்கும் இந்த கப்பல் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். மேலும் 80,000 கார்கள், 50,000 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30,000 டிரக்குகளையும் சுமந்து செல்லும். இதன் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பயனடைவதுடன் போர்பந்தர், சோம்நாத், துவாரகா மற்றும் பலித்தன ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலா ஆகியவை நல்ல வளர்ச்சி அடையும்.