Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

மனு ஸ்மிருதி தொடர்பாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொளி கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக கூறி அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை மீறி உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Categories

Tech |