Categories
தேசிய செய்திகள்

“8 அடி 2 அங்குலம் வளர்ந்த” இந்தியாவிலேயே உயரமான மனிதரின்…. உருக்கமான பேட்டி…!!

மிகவும் உயரமாக வளர்ந்த மனிதர் ஒருவர் தான் பிறந்தது வரம் அல்ல சாபம் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் காசியாகி கிராம பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திர பிரதாப் சிங்(25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. 8 அடி 2 அங்குலம் உயரமுடைய இவர் இந்தியாவிலேயே மிக உயரமான மனிதர் என்கிற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளார். இது குறித்து தர்மேந்திரா கூறுகையில், “நான் உயரமாக இருப்பது எனக்கு வரம் அல்ல சாபம். என் உயரத்தை பார்த்த பெண்கள் பலர் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டனர். இருப்பினும் எனக்கு இப்போது ஒரு வாழ்கை துணை தேவைப்படுகின்றது. நான் உயரமாக இருப்பதால் என்னை வித்தியாசமாக பார்க்கும் மக்கள் என்னுடன் செல்பி எடுக்கிறார்கள். மேலும் எனக்கு பணத்தை பரிசாக கொடுப்பார்கள்.

தற்போது கொரோனா காலமாக இருப்பதால் என்னால் வெளியில் செல்ல முடியவில்லை. இதனால் வருமானத்தை இழந்து கஷ்டப்படுகிறேன். எனவே என் உயரத்திற்கு ஏற்ற ஒரு வேலையோ அல்லது நிதிஉதவியையோ வழங்குமாறு முதல்வர் யோகியிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். மேலும் கடந்த வருடம் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக என்னை சேர்த்த மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்கு, என் உயரத்திற்கு ஏற்றவாறு டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்து வரவழைத்தார்கள்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |