அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அவ்வாறு நவம்பர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மறு தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடப் பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அது ஒரு மணி நேர தேர்வாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.