Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் – கமல் ட்விட்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமலஹாசன் நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடினார். நவம்பர் 7 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திரைத் துறையைச் சார்ந்தவர்கள், பல்வேறு ஆளுமைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கமல் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், திரைத்துறை ஆளுமைகள், ஊடகவியலாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள ‘உள்ளும் புறமும்’ சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என  பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |