Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர், 20 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் போட்டி என அடுத்தடுத்து மூன்று தொடர்களில் விளையாட இருக்கின்றது. இதற்காக இந்திய அணி வீரக்ளும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் தற்போது விராட் கோலி விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராத் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவம் காரணமாக முதல் டெஸ்ட்டுக்கு பிறகு விலகுவதாக கூறியுள்ளார். அவருக்கு பதில் ரோகித் சர்மா கடைசி மூன்று போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |