நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? அரசியல் கட்சி தொடங்குகிறாரா? என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு முழு காரணம் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக அவர் பதிவு செய்ததற்கு பிறகுதான் இப்படியான பரபரப்பு செய்திகள் வலம் வந்தன.
தந்தையின் இந்த முடிவுக்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்தது அதிரடியை காட்டிய நிலையில் விஜயின் அரசியல் நிகழ்வு அடுத்தடுத்துச் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் தான், நடிகர் விஜய்யை சுற்றி ஆன்லைன் அரசியல் நடப்பதாக அவரது தந்தை எஸ் வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார். அதில் மூன்று பேர் விஜய்க்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்,
அவர்கள் சொல்வதை அப்படியே உண்மை என்று விஜய் நம்புகிறார். தற்போது அவர்களால் தனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து புதன்கிழமை விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்திற்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.