அமெரிக்காவில் வேலையின்மை கொரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, தேவையற்றவைகளுக்கு ட்ரம்ப் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தார்.
அமெரிக்காவில் முன்னதாகவே அதிகாரம் மாறிவிட்டது. பிகாரிலும் இதே நிலை ஏற்படலாம். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு எங்களைத் தவிர வேறு மாற்று இல்லை என்ற மாயையிலிருந்து கட்சியினர் வெளிவர மக்கள் தக்க பதிலடி அளிக்கவேண்டும்.
ட்ரம்ப் தற்போதுவரை தனது தோல்வியை ஏற்கவில்லை. மாறாக அவர் வாக்களிக்கும் முறையை குற்றம் சுமத்திவருகிறார். டிரம்ப் இந்தியாவில் மிகுந்த அன்புடன் வரவேற்கப்பட்டார் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. தவறான மனிதருடன் நிற்பது நமது கலாசாரம் அல்ல, ஆனால் நமது நாட்டில் அதுபோன்ற செயல்கள் இன்னும் தொடர்கிறது.
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் சாதனைகளை ட்ரம்ப் ஏற்க மறுத்தார். இதன் மூலம், அவர் பெண்களை மதிக்க முற்படுவதில்லை என்பது தெரிகிறது. இதுபோன்ற நபர்களையே பாஜகவும், பிரதமர் மோடியும் ஆதரித்தனர் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.
இந்தியா கோடிக் கணக்கான செலவில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாலும், அந்நாட்டு மக்கள் தங்கள் தவறை சரிசெய்துள்ளனர். அதேபோல், பிரதமர் மோடி மற்றும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களைப் புறக்கணித்து இளம் தலைவரான தேஜஸ்விக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.