Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தேங்காய் பால் குழம்பு… சுவையோ சுவை…!!!

தேங்காய்ப்பால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய்                                       – 1
உருளைக்கிழங்கு                      –  300 கிராம்
மிளகாய்                                         – 2
மல்லி, சீரகம்                                – 2 தேக்கரண்டி
கத்தரிக்காய், பீர்க்கங்காய் –  1

செய்முறை:

முதலில் தேங்காயை துருவி பாலை கெட்டியாகஎடுக்க வேண்டும். இரண்டாவது பாலுடன் சேர்த்து மிளகாய், மல்லி, சீரகம் கலவையை அரைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை வெட்டி போட்டு மசாலா கலந்து தேங்காய்ப்பாலில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் கெட்டியான பாலை ஊற்றவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை கிராம்பு ஏலம் போட்டு தாளித்து, பின் இதனை வெந்த காய்கறிகளுடன் கொட்டினால் சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்.

Categories

Tech |