துலாம் ராசிக்கு…! நல்ல செயல்கள் அனுகூலப் பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். உபரி பணவரவு ஏற்படும். சேமிக்கும் எண்ணம் உருவாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுக்க வேண்டும். காரமான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
பிள்ளைகள் மீது அன்பு வெளிப்படும். பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் ஓரளவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். மாணவக் கண்மணிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டும்.விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் வளர்ச்சியைக் கண்ட அடுத்தவர்கள் பொறாமை படுவார்கள்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை அணுக வேண்டும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை வழிபட்டு வாருங்கள் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுங்கள் முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.