ராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் 3 அடி உயரம் கொண்ட செங்கலில் விருச்சாசனத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றபடி உலக சாதனை செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் டால்பின்ராஜ் செங்கலை 3 அடி உயரத்திற்கு அடுக்கி அதன்மீது ஒற்றைக் காலில் நின்றபடி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை ஒன்றரை மணி நேரம் நின்று உலக சாதனை செய்தார். இதற்கு முன்பு இந்த சாதனையை சென்னையை சேர்ந்த மாணவர் 30 நிமிடம் செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒரு மணி நேரம் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இன்று டால்பின்ராஜ் ஒரு மணி நேரம் முப்பது நிமிடம் நின்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை குளோபல் உலக சாதனை அமைப்பின் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர்.