Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய ஒலி எச்சரிக்கை “பயணிகள் பதறியடித்த படி ஓட்டம் !!..

சென்னை ஐகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய  எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதால் பயணிகள் பதறி அடித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சென்னை ஹைகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீ பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆகையால் உடனடியாக பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அபாய ஒலி எச்சரிக்கையும் அடிக்கத்தொடங்கியது அதன்பின் அங்கு வந்த அனைத்து மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக அலைமோதி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.பின்  தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் சோதனையில் பயணி ஒருவர் ஆர்வகோளாறால் அபாய எச்சரிக்கை சிகிச்சை அழுத்தியது தெரியவந்துள்ளது சோதனைக்கு பின் மீண்டும் அனைத்து ரயில்களின் சேவை தொடங்கப்பட்டது

Categories

Tech |