தமிழக மீனவர்களின் 94- விசை படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த வகையில் 2015 முதல் 2018 வரை தமிழக மீனவர்களின் 121 விசைப் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படகுகளால் கடற்கரை மாசடைவதாக புகார் எழுந்ததையடுத்து 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டது. ஒரு விசைப் படகுகின் விலை சுமார் 20 லட்சமாகும். இலங்கை அரசின் முடிவால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள்.
இப்பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தங்களது உரிய இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்தப் பிரச்சனையில் தலையிட்டு படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மதிமுக பொது செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். படகுகளை மீட்க முடியாவிட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என்று வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.