புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்து 5 சிறுமிகளை போதைப்பொருள் கொடுத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சதமங்கலத்தில் கண்ணியப்பன் என்பவர் நடத்தி வரும் வாத்து பண்ணையில் இரண்டு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக தங்கி வாத்து மேய்க்கும் வேலை செய்து வந்த 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குழந்தைநல மையகுழு மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 5 சிறுமிகளுடன் மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா விசாரணை நடத்தினர். அப்போது கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 5 சிறுமிகளையும் விரட்டி பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் மற்றும் அவரது மகன் ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
சூடு வைத்தும், மிளகாய் பொடி தூவியும் சிறுமிகளை மிரட்டி வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். சிறுமிகள் மயக்கத்திலேயே இருப்பதற்க்காக அவர்களுக்கு போதைப் பொருட்களை தொடர்ந்து கொடுத்து கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். இதனையடுத்து சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த பண்ணை உரிமையாளர்கள் கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பசுமதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகியோர் மீது கற்பழிப்பு மற்றும் பொக்ஸஸ் பிரிவின்கீழ் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் ஆந்திராவில் பாதிங்கி இருந்த 6 பேரையம் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் 3 பேரையம் தேடி வருகின்றன.