அறுவை சிகிச்சைக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து சென்ற காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இத்தாலியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளால் அதிவிரைவு போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வாகனம் லம்போர்கினி ஹூராகான் எனும் ஸ்போர்ட்ஸ் கார். இந்த காரின் உதவியுடன் இத்தாலி காவல்துறை அதிகாரிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பண்டோவாவிலிருந்து ரோம் வரை சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளனர்.
இந்த ஸ்போர்ட்ஸ் கார் உடலுறுப்புகள், தடுப்பூசிகள் மற்றும் பிளாஸ்மாக்களை கொண்டு செல்வதற்காக காவல்துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இந்த காரில் குளிர்சாதனப் பெட்டியும் அத்தியாவசிய தேவைக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் தக்க சமயத்தில் அறுவை சிகிச்சைக்குத் தேவையான கிட்னியை கொண்டு சேர்த்த காவல்துறையினருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.