Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு – வெளியான அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்தது. அன்றாட வாழ்வாதாரத்தை தேடி இருந்த பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடன்தொகை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் ஊரடங்கின் போது இயங்காத சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி ரத்து செய்யப்படும் என அம்மாநில ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார். சரக்கு வாகனங்களுக்கு இரண்டு மாதம்,  பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதம் வரிச்சலுகை அளிக்கப்படும். இந்த வரிசலுகையால் ஏற்படும் ரூபாய் 21 கோடி இழப்பை கூடுதல் நிதி ஆதாரம் மூலம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |