Categories
உலக செய்திகள்

என்னடா பண்ணுறீங்க…! குடிக்கின்ற பாலில் நபர் செய்த செயல்… வைரலாகிய அதிர்ச்சி வீடியோ ..!!

துருக்கியில் உள்ள பால் கம்பெனியில் குடிக்கும் பாலில் ஒருவர் குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டில் உள்ள மத்திய அனடோலியன் மாகாணத்தில் இருக்கும் கென்யா என்ற நகரில் இயங்கி வரும் பால் தொழிற்சாலை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் எம்ரி சாயர் என்பவர் பால் தொட்டியில் ஆனந்தக் குளியல் போட்ட வீடியோ சர்ச்சையாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் பணியாற்றிய மற்றொருவர் இதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் அப்லோடு செய்தது, வைரலாகி சர்ச்சை ஆகியுள்ளது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சம்பந்தப்பட்ட ஊழியர் கைது செய்ய வேண்டும் என்றும், அவர் குடிக்கின்ற பாலில் இப்படி செய்யலாமா ? என்று ஏராளமான குரல்கள் வலுத்து நிலையில், இது குறித்து விளக்கம் அந்த நிறுவனம் விளக்கம் அளித்தது. அதில், உண்மையில் அந்த ஊழியர் பாலில் குளிக்கவில்லை என்றும், நீர் மற்றும் தூய்மைப்படுத்தும் திரவத்தில் தான் அவர் குளித்துள்ளார் என தெரிவித்தது.

பாய்லரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவம் நிரப்பிய தொட்டியில் தான் அவர் குளித்தார் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட ஊழியரை தற்போது பணி நீக்கம் செய்துள்ளதாகவும் நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையை மூட உத்தரவிட்டுள்ள நிலையில் அவதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |