Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி – முன்னாள் டிஜிபி மனமாற்றம்

நடிகர் சூரி அளித்த 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பண மோசடி புகார் மீதான வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் குடவலா தனது முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

விரத்திறன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ஊதியமாக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய்க்கு பதில் நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் குடவலா ஆகியோர் கூறியுள்ளனர். நிலம் வாங்குவதற்காக இருவரும் தன்னிடமிருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாய்யை கூடுதலாக பெற்று மோசடி செய்துள்ளதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்தார். இந்த வழக்கில் காவல்துறை கைது செய்யக் கூடும் என்பதால் ரமேஷ் குடவலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷ் குடவலாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன்ஜாமின் மனு தொடர்பாக வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |