பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன.
இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் இந்த தேர்தல் முடிவு மிகவும் உற்றுநோக்க பட்டுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.