Categories
உலக செய்திகள்

5 வயதில் இப்படி ஒரு திறமையா?… சாதனைப் புத்தகத்தில் இடம்… துபாயில் அசத்திய 5 வயது சிறுமி…!!!

துபாயில் 5 வயது சிறுமி 4 நிமிடம் 23 விநாடிகளில் ஐநா சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் தலைநகரங்கள் ஒப்பித்து சாதனை படைத்துள்ளார்.

துபாயில் வசித்துக் கொண்டிருக்கும் பிராணவி குப்தா என்ற 5 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வருகிறார். அவர் நான்கு நிமிடம் 23 விநாடிகளில் ஐநா சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களும் மூச்சு விடாமல் ஒப்பிட்டு சாதனை படைத்துள்ளார். அந்த சிறுமியின் சாதனை தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என்று விருப்பம் கூறியுள்ளார். அதற்கான அனைத்து பயிற்சிகளையும் சிறுமி மிகத்தீவிரமாக எடுத்து வருகிறார் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |