நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சனையை தீவிரமாக நினைத்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுத்து வினியோகத்தை மேம்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, வினியோகம், பங்கீடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த மாநில அரசுகளின் அங்கீகாரத்தை திரும்ப வழங்க வேண்டும்.
அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு மத்திய அரசு மாநில அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் கடுமையான விலை உயர்வால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் மாநில அரசுகள் அதிகாரம் ஏதும் இல்லாமல், மக்கள் படும் அவதியை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது ” என்று அவர் கூறியுள்ளார்.