Categories
மாநில செய்திகள்

பஸ்ல டிக்கெட் எடுக்காம சொகுசு பயணம்… சிக்கினா 500 ரூபா… 2 மாசத்துல 5 லட்சம்…!!!

பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “மாநகரப் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை எதுவும் இல்லாமல் பயணம் செய்வது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றச் செயல். பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகபட்ச அபராத தொகையாக 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 1,522 பேரிடம் இருந்து ரூ.1,97,550 அபராதமும், அக்டோபர் மாதத்தில் 3,122 பேரிடமிருந்து ரூ.5,52,050 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இனி வருகின்ற காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |