Categories
உலக செய்திகள்

அதிரடியில் இறங்கிய ட்ரம்ப்…. பாதுகாப்புத் துறை மந்திரி…. திடீர் பதவி நீக்கம்…!!

பாதுகாப்புத் துறை மந்திரி மார்க் எஸ்பரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியாக மார்க் எஸ்பர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரை அந்த பதவியில் இருந்து ட்ரம்ப் அதிரடியாக விலக்கியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் என்பவரை அப்பதவியின் பொறுப்பு அமைச்சராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின்  இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிறிஸ்டோபர் மில்லர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்க உள்ளார். மேலும் மார்க் எஸ்பரின் முந்தைய கால பணிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் மார்க் எஸ்பர் ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் இந்தியா வந்துள்ளார். எனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்த நேரத்தில் அவர் டெல்லி வந்துள்ளது முக்கியத்துவமாக கருதப்பட்டது.

Categories

Tech |