கேரட் கேக் செய்ய தேவையான பொருள்கள்:
கேரட் துருவியது – 1/2 கப்
ரவா – 1 கப்
மில்க் மெய்ட் – 1/4 கப்
சர்க்கரை – தேவையான அளவு
சாக்லேட் – 1
முட்டை – 2
நெய் – 5 ஸ்பூன்
வெண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
முந்திரி, பாதாம் – சிறிதளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் மைதா மாவு, ரவா இரண்டையும் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும். பின்பு அதனுடன் உப்பு, மில்க்மெய்ட், வெண்ணெய், நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
அதனை அடுத்து மைக்ரோ வேவ் ஓவனில் 1/2 ஸ்பூன் நெய்யை ஊற்றி, அதில் துருவிய கேரட்டை கலந்து 1 நிமிடம் வைத்து, எடுத்து கலக்கி வைத்த கலவைகளுடன் சேர்க்கவும்
அதன் பின்பு, மீதி உள்ள நெய்யை ஊற்றி, ஓவனினுல் 30 நொடி வைத்து,கேக் ட்ரெயை சுடாக்கி கொள்ளவும். அதனை கலவையுடன் சேரும்படி நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு கலக்கி வைத்த கலவையைஎடுத்து கேக் ட்ரெயில் ஊற்றி முக்கால் பகுதி வரைக்கும் ஊற்றியவுடன், மீதமுள்ள கேரட்டை அதன் மேல் தூவி கொள்ளவும்.
அதனையடுத்து, ஓவனில் 10 நிமிடம் வரும் வரை டைம் பிக்ஸ் செய்து, கேக் ட்ரெயில் கலக்கி வைத்த கலவையை எடுத்து அதில் வைக்கவும்.
பிறகு ஓவனிலிருந்து 5 நிமிடம் கழித்து, வேக வைத்த கலவையானது நன்கு வெந்ததும், ஓவனை திறந்து அதன் மேல் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பை போட்டு அலங்கரித்து மைக்ரோ வேவ் வை ஆன் செய்து சிறிது நேரம் வைத்து, எடுத்தால் கேக் ரெடியாகிவிடும்
பின்பு ரெடியான கேக்கின் மேல் சாக்லேடை துருவி போட்டு, அதன் சூட்டிலேயே உருகி வைத்து எடுத்தால் சுவையான, சூடான கேரட் கேக் ரெடி