பீகார் மாநில தேர்தலில் ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு கூட்டணிகளுக்கிடையேயான போட்டி கடுமையாக இருந்து வருகின்றது.
பீகார் தேர்தலில் ஆர்.ஜே.டி கூட்டணி 111 இடங்களிலும், ஜே.டி.யு கூட்டணி 115 இடங்களிலும், எல்.ஜே.பி 9 பாஜக – காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான போட்டி நிலவு கின்றது. இந்த தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கின்றார். இதில் எல்.ஜே.பி 9 இடங்களில் முன்னிலையில் இருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அதே போல 16 சிறிய கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன.
இப்போதைய நிலை அப்படியே நீடித்தால் இவர்களுடைய ஆதரவில்லாமல் ஆட்சி அமைப்பது கடினமாகிவிடும் அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் எல்.ஜே.பி பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டால் அவர் நிதிஷ்குமார் முதல்வராக இருக்க கூடாது என்று வலியுறுத்துவார் இந்த தேர்தலில் நிதிஷ்குமாரை எதிர்த்து தான் இவர் போட்டியிட்டார்.
அதே போல பல்வேறு கட்சிகளில் இருந்து மாறிச் சென்றவர்கள் தான் சிறிய கட்சிகளாக… வேட்பாளராக தேர்தல் களத்தில் நின்றுள்ளார். அவர்களை மீண்டும் அவரவர் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த எந்த கூட்டணியும் இன்னும் பெரும்பான்மையை பிடிக்காததால் இந்த தேர்தல் களம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.