Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… டிபன் சாம்பார்…!!!

பருப்பு போட்டு தான் சாம்பார் வைக்கணுமா என்ன? பருப்பு பயன்படுத்தாமலே ருசியான சாம்பார் செய்யலாம். அதுவும் ஓட்டலில் செய்யப்படும் சாம்பார் போலவே வீடே கம கமவென்று மணக்கும் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு               – 2 தேக்கரண்டி
பூண்டு                             – 2 பல்
வர மிளகாய்                – 9
வர மல்லி                      – 2 தேக்கரண்டி
சீரகம்                               – 1 ¼ தேக்கரண்டி
வெந்தயம்                      – ½ தேக்கரண்டி
மிளகு                               – 8
பெருங்காய பொடி     – ¼ தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய்                     – 3 தேக்கரண்டி
உப்பு                                   – தேவையான அளவு
சின்ன வெங்காயம்    – 10
பெரிய வெங்காயம்   – 1
தக்காளி                           – 2
பச்சை மிளகாய்           – 3
மஞ்சள் தூள்                  – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள்               – 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் 1 நறுக்கிய வெங்காயம், 2 தக்காளி, 3 பச்சை மிளகாய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள், 2 பல் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி வர மல்லி, 7 வர மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி வெந்தயம், 8 மிளகு, ஆகியவற்றை வாசனை வரும் வதக்கி கொள்ளவும். பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும். அதனை காற்று புகாத டப்பாவில் அடைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அடுத்து ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/4 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி சீரகம், 2 வர மிளகாய், 1/4 தேக்கரண்டி பெருங்காய பொடி, 10 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும், அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதையும் சேர்க்கவும்.

பிறகு அதனோடு அரைத்த சாம்பார் பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி சேர்த்து, ஒரு கொதி வருவதற்குள், கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவை தண்ணீருடன் கரைத்து ஊற்றி கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சாம்பாரை பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Categories

Tech |