Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போட அரசு ஆலோசனை செய்து வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் நேற்று கருத்து கணிப்பு கூட்டம் நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை கூறி கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டே தமிழக அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல் கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப் போட தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது. இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று அல்லது நாளை முதலமைச்சரின் மூன்று மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன.

Categories

Tech |