Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை மட்டும் கேட்குறீங்க…. அதிமுக மீது பாய்ந்த பாஜக… கண்டித்த ஐகோர்ட் …!!

வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன.

பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நேற்று காங்கிரஸ் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் 3,000 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். அது தொடர்பாக தமிழக அரசு வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது தவறாக நடக்கும் ஒரு காரியத்தை நியாயப்படுத்தி உங்கள் வழக்கிற்காக ஆதாரமாக தேடாதீர்கள் என்று நீதிபதிகள் கண்டனத்தை பதிவு செய்ததுடன் வழக்கை மதியம் ஒத்தி வைத்து இருக்கிறார்கள். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும்.

Categories

Tech |