சுவையான மார்னிங் ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு
பூண்டு பேஸ்ட் – தேவையான அளவு
இஞ்சி பேஸ்ட் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் பாத்திரத்தில் பச்சை பயிறு, மூங்தால் சேர்த்து மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு ஊறவைத்த பச்சை பயிறு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து கெட்டியாக கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்பின் அரைத்து வைத்துள்ள பச்சை பயிறு கலவையில் வெங்காய தாழ், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும், பக்கோடா கலவையை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.
இந்த சுவையான மூங்தால், பச்சை பயிறு பக்கோடாவை சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து ஒரு மாலை சிற்றுண்டாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறவும்.