Categories
உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை …!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 உறுப்பு நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு முதன்முறையாக காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் தலா 10 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர். ரஷ்ய பிரதமர் விளாடிமிர்புதின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கொரோனா தடுப்பு அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான், பெலாரஸ், மங்கோலிய, ஆப்கான் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். லடாக் எல்லை பிரச்சனைக்கு பிறகு பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் ஒன்றாக பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

Categories

Tech |