தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் சுமை என்று காங்கிரஸ் தனித்து விடப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸின் இந்த மெகா கூட்டணி ஆகியவை போட்டியிட்டனர். அந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி தற்போது பின்தங்கி பாரதிய ஜனதா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் 2021 ஆம் ஆண்டில் கூட்டணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் இந்திய காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.