Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (11-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

11-11-2020, ஐப்பசி 26, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 12.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி.

பூரம் நட்சத்திரம் காலை 06.28 வரை பின்பு உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் பின்இரவு 04.25 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

ஏகாதசி விரதம்.

பெருமாள் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

நாளைய ராசிப்பலன் –  11.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் குறைந்தே இருக்கும். தொழிலில் எதிர்பாராத பிரச்சனை உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பற்றாக்குறை குறையும். உத்தியோகத்தில் சிறு மாறுதல்கள் லாபம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலையில் நெருக்கடிகள் இருக்கும். நண்பர்களால் ஏமாற்றம் அடைவீர். உடல்நிலை சீராக இருக்காது. வீட்டில் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை சீராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்லக் கூடும். தொழிலில் இருப்பவர்களுக்கு அவர்கள் திறமையை வெளிப்படுத்தும் நாளாக இன்று அமையும். தெய்வ வழிபாடு இருக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடல்நிலை சற்று சோர்வு சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். பண வரவு இருக்கும் ஆனால் செலவும் அதிகரிக்கும்.வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. தொழிலில் உடன் இருப்பவர்களால் லாபம் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நல்லபடியாக இருக்கும்.சகோதர சகோதரி வழியில் நல்ல செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எளிதில் முடியும் காரியம் இழுபறி நிலையை உண்டாக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை உண்டாகும். விட்டுக் கொடுத்து சென்றால் ஒற்றுமை கூடும். உறவினர்கள் முயற்சியால் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஆதரவு பெறுவீர்கள்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தன வரவும் லட்சுமி கடாட்சமும் இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும். தொழிலில் எதிரிகள் நண்பர்களாக செயல்பட்டு உதவுவார்கள். தொழிலில் உடனிருப்பவர்களின் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு தொழிலில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தாமதமில்லாமல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார். ஒருசிலருக்கு புதிய பொருட்களை வாங்குவீர்கள். கடன் தொல்லை தீரும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் மந்தநிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறு இருக்கும்.பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்  கவனமாக இருங்கள் எதிலும்.தொழிலில் புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பின் செய்வது நல்லது.

கும்பம்

உங்களின் ராசிக்கு மனக்குழப்பம் ஆக இருப்பீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படுவீர்கள். பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் மற்றவர் பிரச்சினையில் தலையிடாமல் இருங்கள். தூர பயணங்களில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

Categories

Tech |