Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னை ஏமாத்திட்டாங்க, வீட்டைவிட்டு தொரத்துறாங்க… மண்ணெண்ணெய் கேனுடன் 102 வயது மூதாட்டி… கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு…

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 102 வயது மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காரமடை சிக்கரம்பலயம் என்ற பகுதியில் 102 வயது செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் மூதாட்டியை சோதனை செய்த போது சிறிய கேன் ஒன்றில் மண்ணெண்ணெய் இருப்பதை கண்டனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டியிடம் இருந்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தார்கள். அதன் பிறகு அந்த மூதாட்டி புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது, “கோவை மாவட்டத்தை சேர்ந்த எனக்கு 2 மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருக்கிறார்கள். நான் தற்போது இளைய மகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்நிலையில் வீடு கட்ட வேண்டும் என்று கூறி எனது இளைய மகள் என் சொத்துக்கள் முழுவதையும் எழுதி வாங்கி விட்டார். அதுமட்டுமன்றி வீட்டில் தங்க விடாமல் என்னை கொடுமை செய்து வருகிறார். அதனால் என்னுடைய சொத்தை திருப்பி என் பெயருக்கு எழுதி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தேன். ஆனால் தற்போது வரை எந்த பலனும் இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் மூன்று முறை புகார் மனு அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நான் தீக்குளிக்கும் எண்ணத்துடன் மண்ணெண்ணெய் கேனுடன் இங்கு வந்தேன். ஆனால் அதனை போலீசார் பறித்து விட்டார்கள்” என்று மூதாட்டி கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |