சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம்
முந்திரி – 150 கிராம்
வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 3
பட்டை – 2
கிராம்பு – 6
ஏலக்காய் – 3
ஜாதி பத்திரி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1
அன்னாசிப் பூ – 1
பாதாம் – 2 டீஸ்பூன்
கசகசா – 50 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ, ஊற வைத்துள்ள கசகசா என அனைத்தையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்தப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பின் பச்சை வாசனை போனபின்பு மல்லித்தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இறக்கினால் சுவையான சிக்கன் குழம்பு ரெடி.