Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 3 மாதம்… மனைவிக்கு மிரட்டல்… செல்போனில் வந்த மெசேஜ்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

முக்கூடல் பகுதியில் பெண்களை ஏமாற்றும் மர்ம கும்பல் இளம் பெண்ணின் கணவருக்கு ஆபாச படத்தை அனுப்பி வசமாக மாட்டிக் கொண்டனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கின்ற கண்டபட்டி என்ற பகுதியில் சாலமோன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (24) மற்றும் மனோசேட் (27) ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதனால் வேலைக்கு செல்லாமல் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி பழகி, அதன் பிறகு தங்கள் வலையில் சிக்க வைப்பார்கள். அதன்படி இளம்பெண்களுடன் ஒன்றாக இருக்கும்படி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பது வழக்கம்.

அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இதனைப் போலவே முக்கூடல் பகுதியில் இருக்கின்ற ஒரு இளம்பெண்ணுடன் சாலமோன் பேசியுள்ளார். அவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது அந்த இளம்பெண் அடிக்கடி அவரிடம் வீடியோ கால் பேசுவார். இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்றை காட்டி சாலமோன், அந்தப் பெண்ணை வீடியோ காலில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அதனை தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட அவர், அந்தப் பெண்ணிடம் பல முறை அந்த புகைப்படத்தை காட்டி அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய அந்தப் பெண், அவர் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி வாரி கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டியதால், அந்த இளம் பெண் வேறு வழி இல்லாமல் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இளம் பெண்ணுக்கு திருமணம் முடிந்தது. அதனால் ஆத்திரமடைந்த சாலமோன், தனது நண்பர்களுடன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் கணவரிடம் இதனை காட்டுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு இளம்பெண் பணம் இல்லை என்று கூறியதால், அவர் கழுத்தில் இருந்த நெக்லஸ் மற்றும் மோதிரத்தை வாங்கி சென்றனர். இதுபற்றி இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரை விசாரிக்க போலீசார் முன்வரவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த சாலமோன், அந்த இளம் பெண்ணின் ஆபாச படத்தை அவரின் கணவர் மற்றும் மாமனாரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். அதனால் அந்த இளம்பெண்ணை அவரின் கணவர் மற்றும் பெற்றோர் வீட்டிலேயே இருக்கும் படி கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அந்த மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |