பைனாப்பிள் பூந்தி செய்ய தேவையான பொருள்கள்:
கடலை மாவு – ஒரு கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
பைனாப்பிள் ஜூஸ் – கால் கப்,
பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள்,
எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:
முதலில் பைனாப்பிளை எடுத்து தோலை சீவி, துண்டுகளாக நறுக்கி, மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாகு காய்ச்சி, அதை சிறிது நேரம் ஆற வைத்து, எடுத்து கொள்ளவும்.
மேலும், அதனுடன் அரைத்த பைனாப்பிள் ஜூஸ், பைனாப்பிள் எசன்ஸ், கடலைமாவு மற்றும் சமையல் சோடாவை சேர்த்துக் கலக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை எடுத்து எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து, மாவை அதில் ஊற்றி வேற ஒரு கரண்டியால் மாவை தேய்த்து விடவும்.
பின்பு எண்ணெயில் தேய்த்து விட்ட மாவானது, முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊறியபின் எடுத்து பரிமாறினால் சுவையான பைனாப்பிள் பூந்தி ரெடி.