தமிழக அரசிற்கு 15 வது நிதி குழு பரிந்துரையை ஏற்று 335 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசுக்கு 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு 1,276 கோடியும், இமாச்சல பிரதேசத்திற்கு 952 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.