Categories
பல்சுவை

ரஜினியின் வசனம்…. கைதட்டி ரசித்த குழந்தை…. பின் வந்த வாய்ஸ் மெசேஜ்… மகிழ்ச்சியில் துள்ளிய பெற்றோர்…!!

பாட்ஷா படத்தை ரசித்துப் பார்க்கும் குழந்தைக்கு ரஜினி வாழ்த்து கூறியது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது

1995ம் வருடம் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் இன்றும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஆட்டோகாரர் மாணிக்கமாக தாதா பாட்ஷாவாக ரகுவரனை தனது ஸ்டைலான நடிப்பில் ரஜினி இந்தப் படத்தில் மிரட்டியிருப்பார். 25 வருடங்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தற்போது இந்த படத்தில் வரும் “நான் ஒரு தடவை சொன்னா” எனும் வசனம் பலரும் கூறும் ஒன்றாகவே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சியில் பாட்ஷா படம் வெளியான சமயத்தில் “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான் கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டு விடுவான்” என ரஜினி கூறும் வசனத்தைக் கேட்டு குழந்தை ஒன்று கை தட்டி ரசித்தது. இதனை காணொளியாக பதிவு செய்த பெற்றோர் ரஜினி அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது பிஆர்ஓ ரியாஸ் அகமதுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து “கடவுளின் ஆசீர்வாதம் குழந்தைக்கு கிடைக்கட்டும். நன்றி” என சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் உள்ளனர் பெற்றோர். குழந்தை படத்தை ரசிக்கும் காணொளியையும் ரஜினியின் வாழ்த்தையும் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.

https://twitter.com/Sabbitaroi2/status/1326059313526308866

Categories

Tech |