Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு தண்டனையா…? பெண்கள் கழிப்பறையை கண்காணித்த அதிகாரிகள் …. கனடாவில் பயங்கரம்…!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அறையில் எப்பொழுதும் பயங்கர வெளிச்சத்துடன் இருக்கும். மேலும் கழிப்பறையில் உள்ள குழாயில் தண்ணீர் வராததால் அதை உபயோகிக்கவும் முடியாது.

குற்றவாளி தன் உடலுக்குள் போதை பொருளை மறைத்து வைத்திருந்தால் அது இயற்கை உபாதை வழியாக வெளியேறும் வரை இந்த தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் போதைப் பொருள் கடத்தியதாக Lisa என்ற பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரை இரண்டு வாரங்கள் இந்த dry cell அறையில் அடைத்துள்ளனர். இவர் தன்னுடைய பெண்ணுறுப்புக்குள் போதை பொருளை மறைத்து வைத்து இருப்பதாக சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகள், அவர் சிறுநீர் கழிக்கும்போது அவருடைய பெண்ணுறுப்பை கண்காணித்துக் கொண்டே இருந்துள்ளனர்.

ஆனால் 15 நாட்கள் ஆகியும் போதைப்பொருள் கிடைக்காததால் lisa வை பரிசோதிக்க மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்ததில் பெண்ணுறுப்புக்குள் அப்படி எந்த ஒரு பொருளும் இல்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பயங்கர தண்டனையால் lisa தனக்குத்தானே பேசிக்கொண்டு மனநிலை பாதிக்கும் அளவிற்கு சென்றுள்ளார். இச்சம்பவத்தையடுத்து பெண்கள் சிறையில் dry cell அறையை கட்டாயம் நீக்க வேண்டும் என்று வக்கீல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |