பெண் ஒருவர் தன் கணவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளதால் தனது மனைவியிடம் விவகாரத்து வாங்காமலே காதலியுடன் வாழலாம் என்று நினைத்துள்ளார். இது அவருடைய மனைவிக்கு தெரியவந்துள்ளது. இப்படி வாழ்வது சட்டப்படி நியாயம் இல்லை என்று நினைத்த அந்த பெண் தன் கணவருக்கு விவாகரத்து கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து தன் கணவருக்கு சட்டப்படி விவாகரத்து கொடுத்து அவருடைய காதலியையும் திருமணம் செய்து வைக்க உதவியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய வழக்கறிஞர் கூறுகையில், தன கணவருக்கு திருமணம் செய்து வைத்த அந்தப் பெண்ணின் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலை தளங்களில் இந்த செய்தி வைரலாகப் பரவியதையடுத்து பலரும் இந்தப் பெண்ணுக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.