Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கலர்பில்லான… ரோஸ் டைமண்ட்ஸ் ரெசிபி…!!!

ரோஸ் டைமண்ட்ஸ் செய்ய தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு                      – ஒரு கப்,
சோள மாவு                               – 2 டீஸ்பூன்,
நெய்                                              – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை                                     – ஒரு கப்,
ரோஜா இதழ்கள்                      – கால் கப்,
ரோஸ் எசன்ஸ்                        – கால் டீஸ்பூன்,
உப்பு                                                – ஒரு சிட்டிகை,
எண்ணெய்                                   – பொரிக்க.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவுடன், சோள மாவு, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியானப் பதத்தில் மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

மேலும், அதை எடுத்து நன்கு உருட்டி, சிறு டைமண்ட் வடிவ துண்டுகளாக நறுக்கியபின்பு, அந்த மாவை ஒன்றோடு, ஒன்று ஒட்டி கொள்ளாமல், தட்டில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடாக்கியதும், அதில்  வெட்டி வைத்த துண்டுகளை போட்டு நன்கு வேகவைத்து, மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

பாத்திரத்தை  அடுப்பில் வைத்து  சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கம்பி பதம் வந்ததும், அதில் ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கலந்து கொதிக்க விட்டு, இரட்டைக் கம்பி பதம் வந்ததும் இறக்கிய பின்பு, அதனுடன் ரோஜா எசன்ஸ் சேர்க்கவும்.

மேலும் பொரித்து வைத்த கோதுமைத் துண்டுகளை எடுத்து, சர்க்கரை பாகுடன் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து  எடுத்தால், சுவையான  ரோஸ் டைமண்ட்ஸ் ரெடி.

Categories

Tech |