Categories
உலக செய்திகள்

தோல்வியால் தூக்கம் வரல… நாட்டை விட்டே போலாமா ? என்ன செய்ய போறார் ட்ரம்ப்… வெளியான புதிய தகவல் ..!!

ஜனாதிபதி தேர்தலில் தன் தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப், பதவியை இழந்த நிலையில் என்ன செய்வார் என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவில் தற்போது புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் அறிவிக்கப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளார். அதிபர் டிரம்ப்க்கு நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ஒருவேளை இந்த தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ட்ரம்ப் மூன்று நாட்கள் தூங்காமல் தவித்து வந்துள்ளார். இப்படி அரசியல் முன் அனுபவம் இல்லாத தொழிலதிபரான ட்ரம்ப்பால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் நிபுணர்களின் தரவுகளை ஏற்க மறுத்த அவர் தேர்தலில் முறைகேடு நடந்ததால் மட்டுமே தான் தோற்றுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 30ம் தேதிக்கு முன்னரே வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் ட்ரம்ப் அடுத்து என்ன செய்யப்போகிறார்? தனக்கு பிடித்தமான கோல்ஃப் விளையாட்டு விளையாடுவாரா? அல்லது தொடர்ந்து அரசியலில் நீடிப்பாரா? என்று பல கேள்விகள் அரசியல் நிபுணர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ட்ரம்ப் குடியரசுக் கட்சியில் ரகசிய உறுப்பினராகவே தொடர்வார் என்றே உறுதியாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் நாட்களில் ட்ரம்பின் நடவடிக்கை மிகவும் கடினமானதாக இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அதிபர் ட்ரம்ப் மீது பிரச்சார நிதி தொடர்பான சட்டங்களில் மீறியது, ஊழல் மற்றும் நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தது, வரி செலுத்தாமல் ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதால் இவற்றிற்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி விடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் தோற்றாலும் வரும் 2024ம் வருடம்  மீண்டும் தேர்தலில் இறங்க 38% குடியரசுக்கட்சி  ஆதரவாளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |