Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தல் முடிவுகள்… மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி… சிராக் பாஸ்வான் கருத்து…!!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றியது. லோக் ஜனசக்தி ஒரு இடத்தை பிடித்தது. பிற கட்சிகள் 7 இடங்களில் வென்று உள்ளன. அதன்மூலமாக பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைய உள்ளது.

இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பீகார் தேர்தலில் மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |